நாள் முழுவதும் அன்னதானம்; தமிழக அரசின் அசத்தல் திட்டம் இன்று தொடக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 16, 2021

நாள் முழுவதும் அன்னதானம்; தமிழக அரசின் அசத்தல் திட்டம் இன்று தொடக்கம்!

நாள் முழுவதும் அன்னதானம்; தமிழக அரசின் அசத்தல் திட்டம் இன்று தொடக்கம்!

தமிழகத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணியில் உள்ள முருகன் கோயில் ஆகிய மூன்று கோயில்களில் தினசரி 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கப் போவதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வரும் 17ஆம் தேதி முதல் மூன்று முக்கிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

அன்னதான திட்டம் விரிவாக்கம்

ஆனால் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. எனவே அமைச்சர் அறிவித்த செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பதில், ஒருநாள் முன்னதாக அன்னதானம் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படும். அதன்படி, திருத்தணி முருகன் கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்று அன்னதான திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி

இதற்காக மலைக்கோயிலில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் திருத்தணி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். நாள்தோறும் மதிய வேளையில் மட்டும் 300 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் அமலில் இருந்து வந்தது. தற்போது அந்த திட்டம் நாள் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது. இந்த அறிவிப்பு பக்தர்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில்களில் புதிய ஏற்பாடுகள்

முன்னதாக திருச்செந்தூர், சமயபுரம் உள்ளிட்ட கோயில்களில் அமைச்சர் சேகர் பாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த சூழலில் சமயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கோயில்களுக்கு சொந்தமான 180 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad