வெற்றிக் கனி பறிக்குமா மக்கள் நீதி மய்யம்? கமல் போட்ட பக்கா ஸ்கெட்ச்!
தமிழகத்தில் எஞ்சியுள்ள 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வரும் 22ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியானது வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக கட்சியின் துணைத்தலைவர் ஏ.ஜி.மவுரியா சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில்,
மக்கள் நீதி மய்யத்தின் செல்வாக்கு
கடந்த 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் தோற்றுவிக்கப்பட்டதை அடுத்து முதல்முறை உள்ளாட்சி தேர்தலை சந்திக்கிறது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம்
போட்டியிடும். எந்தவொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. தனித்து களமிறங்கவே திட்டமிடப்பட்டுள்ளது. மிகத் தீவிரமாக பிரச்சாரத்தை முன்னெடுத்து பெருவாரியான இடங்களை கைப்பற்றும். மக்கள் நீதி மய்யத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நல்ல வாக்கு வங்கி இருக்கிறது.
மூத்த தலைவர்கள் போட்டி
தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கும் ஏற்கனவே பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் சிறந்த வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப்படுவர். கட்சியின் மூத்த தலைவர்களாக இருக்கும் தங்கவேலு, ஸ்ரீபிரியா, செந்தில் ஆறுமுகம் உள்ளிட்டோர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது.
பிரச்சாரக் களத்தில் கமல் ஹாசன்
அதன்பிறகு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறினர். அடுத்தடுத்து கட்சி பிரதிநிதிகள் வெளியேறியது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இந்த சூழலில் தனது கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையிலும், வாக்கு வங்கியை வலுப்படுத்திக் கொள்ளும் வகையிலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடுகிறது. 9 மாவட்டங்களில் 1,521 வேட்பாளர்களை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment