அதை தொட்டா, போராட்டம் வெடிக்கும்: எச்சரிக்கும் ஜெயக்குமார்
ராமசாமி படையாட்சியாரின் 104ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவருடைய சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தொழிலாளர்களுக்காவே ஒரு கட்சியை ஆரம்பித்த ராமசாம
ி படையாட்சியாரின் புகழை போற்றும் வகையில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருடைய சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறோம். அம்மா அரசு காலத்தில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டதோடு, சட்டப்பேரவையிலும் அவரின் படம் திறக்கப்பட்டு அவருடைய பிறந்தநாள் விழா அரசு விழாவாகவாக கொண்டாட அறிவிக்கப்பட்டது” என்றார்.
பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்து பேசிய அவர், “உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு நேற்று உரிய விளக்கம் அளித்து, நாங்களும் கருத்து
தெரிவித்துவிட்டோம் என்பதால் இதனை பெரிதாக்க விரும்பவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கொள்கை உண்டு” என்று கூறினார்.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருவது குறித்த கேள்விக்கு, “ முழுக்க முழுக்க பழிவாங்கும் நடவடிக்கை. உள்ளாட்சி தேர்தலில் இயங்கவிடமால் கட்சியை முடக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகின்றனர், அது நிறைவேறாது” என்றார்.
No comments:
Post a Comment