EXCLUSIVE: கே.சி.வீரமணி சிக்கியது எப்படி? பின்னணி தகவல்!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையையும், விசாரணையையும் முடுக்கிவிட்டுள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரைத் தொடர்ந்து யார் சிக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் கே.சி.வீரமணியை வளைத்துள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.
இவருக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களிலும்
திருவண்ணாமலை மாவட்டம் குருவிமலை கிராமத்தில் உள்ள வீரமணியின் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி சொத்து சேர்த்ததாக கே.சி வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது.
எப்படி கே.சி.வீரமணி சிக்கினார் என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். “குடியாத்தம் அருகே மேல்பட்டி என்ற ஊரில் விவசாயக் கல்லூரி ஒன்று வீரமணி கட்டுகிறார். அதற்காக அந்த இடத்தில் சிறிது சிறிதாக நிலங்கள் வாங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலங்கள் அனைத்தும் ஒரே மாதத்தில் அவரது மாமனார் பெயருக்கு மாறுகிறது. பின்னர் அவரது மாமனாரிடமிருந்து, வீரமணி, அவரது மனைவி மற்றும் சொந்த பந்தங்கள் இருக்கும் அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத் தான் லஞ்ச ஒழிப்புத்துறை ஸ்ட்ராங்காக பிடித்துக் கொண்டது. மொத்தமாக மாற்றினால் சிக்கல் வரும்
என சிலர் கூறியபோதும் வீரமணி கேட்கவில்லையாம். இப்போது விழி பிதுங்கி நிற்கிறார்” என்று கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment