அயோத்தி தாசருக்கு மணி மண்டபம்: கண்ணீர் மல்க நன்றி சொன்ன எம்.எல்.ஏ - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

அயோத்தி தாசருக்கு மணி மண்டபம்: கண்ணீர் மல்க நன்றி சொன்ன எம்.எல்.ஏ

அயோத்தி தாசருக்கு மணி மண்டபம்: கண்ணீர் மல்க நன்றி சொன்ன எம்.எல்.ஏ

அயோத்திதாச பண்டிதருக்கு வட சென்னையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், “தமிழன், திராவிடன் ஆகிய இரண்டு சொற்களையும் அறிவாயுதமாக ஏந்தியவர் அயோத்திதாச பண்டிதர். திருக்குறளுக்காக அவர் ஆற்றிய தொண்டுக்கு நாம் அனைவரும் தலைவணங்க வேண்டும்.


இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு சாதியும் மதமுமே தடைகள் என்று சொன்னவர் அயோத்திதாசப் பண்டிதர். அவரது அறிவை வணங்கும் விதமாக வடசென்னை பகுதியில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்” என அறிவித்தார் முதல்வர் முக ஸ்டாலின்.

அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்று வாழ்த்தி கண்ணீர் மல்க நெகிழ்ச்சியோடு பேசினார் விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன்.:


“தமிழர்களின் வரலாற்றில் இந்த நாள் மறக்க முடியாத பொன்னாள், முதல்வரின் இந்த அறிவிப்புக்கு உணர்வோடு கோடான கோடி நன்றியை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞரின் மறைவின் போது அவரது உடல் எடுத்துச் செல்லும் போது என்னையறியாமல் நான் அழுதேன் திருமா என்னை ஆற்று படுத்தினார். தமிழ் சமூகத்திற்கு கலைஞர் ஆற்றிய பணி அவ்வளவு.

அயோத்திதாச பண்டிதரின் ஒரு பைசா தமிழன் நாளிதழின் நூற்றாண்டு விழாவையும் கலைஞர் தான் கொண்டாடினார்

No comments:

Post a Comment

Post Top Ad