கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு!

கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்: ரேசன் கடைகளுக்கு புதிய உத்தரவு!

ரேசன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும், இலவசமாகவும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுதவிர, அரசின் நலத்திட்ட உதவிகள், பேரிடர் காலங்களில் வழங்கப்படும் நிதியுதவி உள்ளிட்டவைகளும் ரேசன் கார்டுகள் மூலமே வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது சுமார் 2.05 கோடிக்கும் அதிகமான ரேசன் கார்டுகள் உள்ள நிலையில், சுமார் 35,233க்கும் அதிகமான நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நுகர்வோர்களிடம் கனிவான முறையில் பணியாற்ற வேண்டும் என்று ரேசன் கடை பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் நியாய விலைக் கடைப் பணியாளர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய ஆட்சியர் கவிதா ராமு, “புதுக்கோட்டை மாவட்டத்தில் 690 முழு நேர நியாய விலைக் கடைகளும், 311 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் என மொத்தம் 1,001 அங்காடிகள் கூட்டுறவுத்துறையின் கட்டுபாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த அங்காடிகளில் மொத்தம் 639 விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கடையின் பராமரிப்பு, கடை தூய்மை, பொருட்கள் இருப்பு மற்றும் பராமரிப்பு, பதிவேடுகள் பராமரிப்பு, பொது மக்களுடன் கனிவான முறையில் பழகுதல், அவர்களது உடல்நிலை பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் உரிமை மற்றும் மனஅழுத்தம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் திறமையுடன் பணியாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்” என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad