திமுக அரசா இப்படி? கோபத்தில் மக்கள்; சி.வி.சண்முகம் பரபரப்பு தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

திமுக அரசா இப்படி? கோபத்தில் மக்கள்; சி.வி.சண்முகம் பரபரப்பு தகவல்!

திமுக அரசா இப்படி? கோபத்தில் மக்கள்; சி.வி.சண்முகம் பரபரப்பு தகவல்!

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் நாளில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொது பட்ஜெட்டும், 2வது நாளில் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்தனர். பின்னர் பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அமைச்சர்களின் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை திமுக அரசு ரத்து செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை

முன்னதாக விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டமங்கலம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பசுபதி, கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் பாபு, ஒன்றிய கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான சி.வி.சண்முகம், தமிழக கிராமப்புற மக்களின் நலனுக்காக ஆடு, மாடுகள் வழங்கக்கூடிய திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தார்.

தமிழக மக்கள் கடும் அதிருப்தி

இதேபோல் மாணவர்கள் நலன் கருதி மடிக்கணினி திட்டமும், 2.5 லட்சம் மகளிருக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டங்களை ரத்து செய்துள்ள ஆளும் திமுக அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இதற்கு நிதி இல்லை என்ற காரணத்தை முன்வைக்கின்றனர். அப்படியிருக்க 2,500 கோட ி ரூபாயில் சென்னையில் பூங்கா அமைக்க திமுக அரசு திட்டமிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment

Post Top Ad