தமிழகத்தில் தூய காற்று; நிறைவேற்றிக் காட்டுவாரா முதல்வர் ஸ்டாலின்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 16, 2021

தமிழகத்தில் தூய காற்று; நிறைவேற்றிக் காட்டுவாரா முதல்வர் ஸ்டாலின்?

தமிழகத்தில் தூய காற்று; நிறைவேற்றிக் காட்டுவாரா முதல்வர் ஸ்டாலின்?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்திய அரசின் தேசிய தூயக்காற்று திட்டம் (National Clean Air Programme - NCAP) 2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் படி மாநில தூயக்காற்று செயல்திட்டத்தை (State Clean Air Action Plan) உருவாக்குவதற்கான வழிகாட்டு நெறிகளை, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் 2019-ஆம் ஆண்டிலேயே உருவாக்கியிருக்க வேண்டும்.

பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இச்செயல்திட்டத்தை 2020 ஆம் ஆண்டில் உருவாக்கி, செயல்படுத்தியிருக்க வேண்டும். இது 1981 இந்திய காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின்படி அரசுகளின் சட்டபூர்வமான கடமை ஆகும். ஆனால் 2021-ஆம் ஆண்டு நிறைவடையவிருக்கும் தருவாயிலும் கூட அதற்கான முதற்கட்டப்பணிகள் கூட தொடங்கப்படவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. உலகில் காற்று மாசுபாட்டினால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

காற்று மாசுபாடு அதிகரிப்பு

உலகிலேயே மிகவும் காற்று மாசடைந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு இந்த எண்ணிக்கை 12 லட்சமாக உள்ளது. இந்தியர்களின் மரணத்துக்கு மூன்றாவது பெரிய காரணம் காற்று மாசுபாடுதான். இந்தியாவில் உயிரிழக்கும் 8 பேரில் ஒருவர் காற்று மாசுபாடு காரணமாக இறக்கிறார். ஆஸ்துமா, நுரையீரல் நோய்கள், நுரையீரல் புற்றுநோய், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களை காற்று மாசுபாடு உருவாக்குகிறது. காற்று மாசுபாட்டினால் 40% இந்தியர்களின் ஆயுள் 9 ஆண்டுகளுக்கு மேல் குறைய வாய்ப்புள்ளது என்று அண்மை ஆய்வு ஒன்று கூறுகிறது.

மாநில தூயக்காற்று செயல்திட்டம்

கொரோனா நோய்த்தொற்றில் இறந்தவர்களில் கணிசமானோர் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள், மக்கள் நல அமைப்புகள், அரசியல் கட்சிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் முழு அளவிலான கருத்துக் கேட்பினை நடத்தி தூயக்காற்று செயல்திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad