மீண்டும் வருது மெகா தடுப்பூசி கேம்ப்... ரெடியா இருங்க மக்களே! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

மீண்டும் வருது மெகா தடுப்பூசி கேம்ப்... ரெடியா இருங்க மக்களே!

மீண்டும் வருது மெகா தடுப்பூசி கேம்ப்... ரெடியா இருங்க மக்களே!

சென்னை டி. எம். எஸ் வளாகத்தில் உள்ள மாநில பொது சுகாதாரத்துறை ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வு கூடத்தை திறந்து வைத்து, இளநிலை உதவியாளர்கள் 91 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியது:

மாநில பொது சுகாதார ஆய்வகத்தில் உருமாறிய கொரோனா தொற்றை கண்டறிய மரபணு பகுப்பாய்வு மையத்தை முதல்வர் திறந்து வைத்துள்ளார். இது பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் அறிவித்ததாகும்.

இந்திய அளவில் 23 இடங்களில் இந்த பரிசோதனை மத்திய அரசின் ஒத்துழைப்போடு நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்குதான் மாதிரிகள் இது நாள்வரை சோதனைக்கு அனுப்பபட்டது. முடிவு கிடைக்க ஒரு மாதம் வரை ஆகும்.

இந்த சோதனையின் மூலமே டெல்டா பிளஸ் வைரஸ் கண்டறியப்பட்டது. ஒரு மாதிரி பரிசோதிக்க 5000 ரூபாய் வரை செலவாகும் நிலை இருந்தது. தற்போது இந்த ஆய்வகத்தி்ன் மூலம் 4, 5 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளை பெற முடியும்.

கொரோனா பாதித்து 35000 க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவ்வளவு பேருக்கும் நிவாரணம் அளிக்க முடியாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குடுமபத்திற்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பது தொடர்பாக பரிசீலித்து வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த கால ஆட்சியாளர்கள் நீட் தேர்வு குறித்து எடுத்த நடவடிக்கைக்கு காரணம் சொல்லாமல் புறக்கணித்ததற்கான காரணங்களை குடியரசு தலைவர் கோரி இருந்தார்.

திமுக தேர்தல் அறிக்கையில், 'முதல் கூட்ட தொடரில் நீட் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற முயற்சிக்கும்' என தான் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுக்கும், நேற்று அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. உரிய தரவுகள் இல்லாமல் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு அனுப்பப்பட்டுள்ளது.

நிச்சயம் நீட் தேர்விலிருந்து விலக்கு பெரும் முயற்சிகளை முதல்வர் எடுப்பார். நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கோரும் மசோதா, ஆளுநர் கையெழுத்துக்கு நேற்றே அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் கையெழுத்திட்ட பிறகு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு செல்லும்

ஏற்கெனவே 14 பேர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தனுஷ் மற்றும் இன்று அரியலூரில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வை வைத்து திமுக நாடாகமடுவதாக பாஜகவினர் கூறுகின்றனர். ஆனால் யார் நாடாகமாடுகிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்

வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். இதுவரை 17 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

நாளை, நாளை மறுநாள் 10 லட்சம் தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 17 ஆம் தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad