"உடனே இத பண்ணுங்க!" - டி.ஜி.பி., சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு!
காவல் நிலையத்தின் பெயர் பலகையில், தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால், உடனே நீக்க வேண்டும் என, டி.ஜி.பி., சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக காவல் துறை இயக்குனர் சைலேந்திர பாபு, அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
சில காவல் நிலையங்களில்
பெயர் பலகையில் தனியார் நிறுவனங்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அது பொது மக்களிடையே ஒரு தவறான புரிதலை காட்டும். எனவே, தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றிருந்தால் உடனே அதனை நீக்க
பெயர் பலகையில் காவல் துறையின் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும். புதிதாக பெயர் பலகை வைக்க காவல் நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட முன்பணத்தை செலவிட்டு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டு உள்ளார்.
No comments:
Post a Comment