குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் சான்ஸ்; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 17, 2021

குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் சான்ஸ்; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

குடும்ப அட்டைதாரர்களுக்கு சூப்பர் சான்ஸ்; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்து மக்கள் மலிவு விலையில் மளிகைப் பொருட்களை பெறுவதற்கு குடும்ப அட்டைகள் உதவுகின்றன. மொத்தமுள்ள 39 மாவட்டங்களில் 34,773 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு உதவியாக 243 கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 2.18 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மூலம் 6.90 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். தொடக்கத்தில் அட்டைகளாக வழங்கப்பட்டு வந்த குடும்ப அட்டைகள், தற்போது ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதனை பயனாளிகளின் ஆதார் கார்டு விவரங்கள் மூலம் சரிபார்த்து மளிகைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. குடும்ப அட்டைதாரர்களின் வசதிக்காக tnpds.gov.in என்ற இணையதளத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இதன்மூலம் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களின் நிலை, நகல் ஸ்மார்ட் குடும்ப அட்டைகளை பெறுதல், புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க, அட்டை தொடர்பான சேவை நிலை அறிய உள்ளிட்ட வசதிகளை பெறலாம்.

மேலும் மொபைலில் பயன்படுத்தும் வகையில் ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ் ஆப் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகள் தொடர்பாக 1967 அல்லது 1800-425-5901 என்ற இலவச உதவி மைய எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ன் படி, அனைத்து பொதுமக்களுக்கும் உணவு சென்றவடைவதை உறுதி செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பழங்குடியினர், மாற்றத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,

விவகாரத்து பெற்றவர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Top Ad