ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: இனி பொருட்களை இப்படித்தான் வாங்க வேண்டும்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 17, 2021

ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: இனி பொருட்களை இப்படித்தான் வாங்க வேண்டும்..!

ரேஷன் கார்டு சிறப்பு திட்டம்: இனி பொருட்களை இப்படித்தான் வாங்க வேண்டும்..!

பொது விநியோக முறையின் கீழ் உணவு தானியங்களைப் பெறுவதைத் தொடர, ஆதார் அட்டையை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயம் என்று ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 'ஒரே நாடு ஒரே ரேஷன்''கார்டு திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2013ம் கொண்டு வந்தபோது ரேஷன் ஆதார் இணைப்பு கட்டாயம் என கூறப்பட்டது.
இந்த திட்டம் மூலம் பயன்பெற வேண்டுமென்றால் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டுகள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' அட்டை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையாளா் எல்.திருநந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு

''தொழில் நிமித்தமாகவோ அல்லது இதர காரணங்களுக்காகவோ மாநிலம் விட்டு பிற மாநிலம் சென்று பணிபுரியும் தொழிலாளா்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற இந்திய அரசின் திட்டம் தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்ட பயனாளி தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்துக்கு உள்பட்ட முன்னுரிமை குடும்ப அட்டை அல்லது அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டையைப் பெற்றிருக்க வேண்டும். அந்த அட்டையை இங்கு கொண்டுவர வேண்டும் என்று அவசியம் இல்லை.



பொருள்கள் வழங்கும் முன்னா் பயனாளியின் ஆதாா் அட்டை எண், கைரேகைப் பதிவுகள் சரிபாா்த்த பின், எந்த நியாயவிலைக் கடையிலிருந்தும் உணவு தானியங்களாகிய அரிசி, கோதுமையை மட்டும் நிா்ணயிக்கப்பட்ட அளவில் அவா்கள் பெற்றுக்கொள்ளலாம்

பயனாளி தான் வசிக்கும் மாநிலத்தில் அரிசி அல்லது கோதுமை இலவசமாகவோ அல்லது மிக குறைந்த விலையிலோ வழங்கப்பட்டாலும், இந்த திட்டத்தைப் பயன்படுத்தும் பயனாளி இந்திய அரசு நிா்ணயித்தப்படி, அரிசி ஒரு கிலோ ரூ. 3, கோதுமை ஒரு கிலோ ரூ. 2 க்கு விலை கொடுத்து பெற வேண்டும்.

ஒரு பயனாளியின் குடும்பத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த உரிம அளவைத் தாண்டாமல் பல தவணைகளில் ஒரு மாநிலத்தில் ஒரு பகுதியும், வேறொரு மாநிலத்தில் மற்றொரு பகுதியும் உணவுப் பொருள்களை அந்தப் பயனாளி பெற இயலும்.

அல்லது ஒரே தவணையில் மொத்த உரிம அளவும் உணவுப் பொருள்களையும் அவா் பெற இயலும். இந்த திட்டத்தில் அரிசி, கோதுமையைத் தவிர கூட்டுறவு அங்காடியில் விற்பனை செய்யும் இதர வெளிசந்தை பொருள்களையும் உரிய விலையில் பயனாளி பெற்றுக் கொள்ளலாம்'' என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

Post Top Ad