இதில் அரசியல் செய்வது அநாகரீகம்: கனிமொழி பாய்ச்சல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 13, 2021

இதில் அரசியல் செய்வது அநாகரீகம்: கனிமொழி பாய்ச்சல்!

இதில் அரசியல் செய்வது அநாகரீகம்: கனிமொழி பாய்ச்சல்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் அண்ணா நகரில் உள்ள சத்யா நகரில்
திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் 4 பேருக்கு தையல் இயந்திரம், 3 பேருக்கு மாற்றுதிறனாளிகள் வாகனம், 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, நீட் விவகாரத்தில் அரைமனதோடு கண்துடைப்பிற்காக முயற்சி எடுப்பதற்கும் முழு மனதோடு முயற்சி எடுப்பதற்கு வித்தியாசம் உண்டு என்றார்.

நீட் தேர்வு ரத்துக்காக அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கண்துடைப்பிற்காக செய்யப்பட்டவை. மாணவர் உயிரிழப்பை பயன்படுத்தி அதிமுக அரசியல் செய்வது அநாகரீகம் என்றும் கனிமொழி குற்றம் சாட்டினர்.

மேலும், நீட் தேர்வுதான் நல்ல மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்றில்லை. தமிழகத்தில் படித்து முடித்து பல்வேறு மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர் என்று தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் நிச்சயம் நமது போராட்டம் வெற்றி பெரும். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதில் திமுக உறுதியாக உள்ளது என்றும் கனிமொழி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad