பொதுத் துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடுவது ஏன்? -பாஜக அண்ணாமலை அசத்தல் விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 20, 2021

பொதுத் துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடுவது ஏன்? -பாஜக அண்ணாமலை அசத்தல் விளக்கம்!

பொதுத் துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடுவது ஏன்? -பாஜக அண்ணாமலை அசத்தல் விளக்கம்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை தி. நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

பாஜக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என்கிறார்கள். பொருளாதாரம் முடங்கி இருந்தபோது விலை உயர்ந்தது உண்மைதான்; ஆனால் இப்போது விலை குறைந்து வருகிறது. மத்திய அரசு எந்த துறையையும் தனியாருக்கு தாரை வார்க்கவில்லை; குத்தகை விடப்பட்டு லாபம் பார்ப்பதே மத்திய அரசின் நோக்கம்.


பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு. எதிர்கட்சியாக இருக்கும்போது ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரவேண்டும் என்று சொன்ன திமுக இப்போது வேண்டாம்.

ஜி.எஸ்.டிக்குள் பெட்ரோலை கொண்டு வந்தால், 30 முதல் 35 ரூபாய் வரை விலை குறையும். தமிழக நிதியமைச்சர் முக்கியமான ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லாமல் அவர் கொடுக்கும் பதில் போதுமனதாக இல்லை.

பொறியியல் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, கட்டணம் இலவசம் என்பது வரவேற்கத்தக்கது இது மாநில அரசின் கடமை. உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு எங்கேயும் வெளியாகவில்லை; எனவே அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.


உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இடையே கூச்சல் குழப்பம் இல்லை. பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முடிவு எட்டப்படும். பாமக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என அறிவித்துள்ளதால் பாமகவின் உணர்வுகளுக்கு பாஜக மதிப்பளிக்கிறது. பாமகவிடம் பாஜக எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று அண்ணாமலை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad