அமெரிக்கா செல்ல தேதி குறித்த பிரதமர் மோடி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

அமெரிக்கா செல்ல தேதி குறித்த பிரதமர் மோடி!

அமெரிக்கா செல்ல தேதி குறித்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி இம்மாத இறுதியில் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து வந்த நிலையில், வருகிற 22ம் தேதி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு கடைசியாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். அப்போது ஹூஸ்டன் நகரில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் அப்போதைய அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப்புடன் அவர் கலந்து கொண்டார். இந்த நிலையில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதையடுத்து, முதன் முறையாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவுள்ளார். ஜோ பைடன் - மோடி ஆகிய இருவரும் காணொலி வாயிலாகச் சந்தித்துள்ளப்போதும் நேரடியாக இதுவரை சந்திக்கவில்லை. எனவே, பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இரு தலைவர்களும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் அவரது முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு வருகிற 22ஆம் தேதி செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜோ பைடனை 23ஆம் தேதியன்று சந்தித்து பேசவுள்ளார். தொடர்ந்து, 24ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ள, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் குவாட் மாநாட்டிலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அதன்பிறகு, நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லா உறுப்பினராக இருக்கும் இந்தியா, கடந்த ஒரு மாதமாகத் தலைமை வகித்தது. ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றிய சமயத்தில் தீர்மானமும் இந்தியா தலைமையில் பாதுகாப்பு கவுன்சலில் நிறைவேற்றப்பட்டது.

ஆப்கானிஸ்தான் நெருக்கடி மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பிரதமர் மோடி - அதிபர் ஜோ பைடனின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பின் போது ஆப்கன் விவகாரத்து முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad