கொரோனாவை விரட்ட சிவப்பு எறும்பு சட்னி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

கொரோனாவை விரட்ட சிவப்பு எறும்பு சட்னி!

கொரோனாவை விரட்ட சிவப்பு எறும்பு சட்னி!

கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர கட்டாயம்
தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன.

இந்த நிலையில், ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கக்கூடிய பழங்குடியினர் சிவப்பு எறும்பு சட்னியை விருப்ப உணவாக சாப்பிட்டு வருகின்றனர். இந்த சிவப்பு எறும்புகள் உடன் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து அதைத் தேங்காய் சட்னி போல பயன்படுத்துகிறனர்.

அண்மையில், ஒடிசாவை சேர்ந்த இன்ஜினியர் நாயதார் பதியல் என்பவர் இது தொடர்பாக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அவரும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்தான். அதில் சிவப்பு எறும்பு சட்னியில் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், கொரோனாவுக்கு மருந்தாக இதனை பரிந்துரைக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.


இந்த மனுவை ஒடிசா மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால், மனுதாரர் கேட்டுக் கொண்டதற்கிணங்க உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு அனுமதித்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “பாரம்பரியமாக கொரோனாவை ஒழிப்பதற்கான மருந்துகள் நிறைய உள்ளன. ஆனால் அவற்றையெல்லாம் கொரோனாவிற்கு மருந்தாக பயன்படுத்த முடியாது. எறும்பு சட்னியை நீங்கள் உங்கள் சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருக்கலாம். ஆனால் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் இந்த எறும்பு சட்னியை நாங்கள் கேட்க முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரர் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad