"காஷ்மீரின் கலாச்சாரத்தை உடைக்க பா.ஜ.க., - ஆர்.எஸ்.எஸ்., முயற்சி" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

"காஷ்மீரின் கலாச்சாரத்தை உடைக்க பா.ஜ.க., - ஆர்.எஸ்.எஸ்., முயற்சி" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

"காஷ்மீரின் கலாச்சாரத்தை உடைக்க பா.ஜ.க., - ஆர்.எஸ்.எஸ்., முயற்சி" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

காஷ்மீரின் கலப்பு கலாச்சாரத்தை உடைக்க பா.ஜ.க., - ஆர்.எஸ்.எஸ்., முயற்சி செய்வதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கு, இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி சென்றுள்ளார். ஜம்முவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில், ராகுல் காந்தி பேசியதாவது:

காஷ்மீர் வருவது எனக்கு சொந்த வீட்டிற்கு வருவது போல் உள்ளது. எனது குடும்பத்திற்கும், காஷ்மீருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. காஷ்மீர் மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக செய்வேன். நான் எப்போதும் பொய் சொல்ல மாட்டேன். உங்கள் மத்தியில், அன்பு, சகோதரத்துவம், கலப்பு கலாச்சாரம் நிலவி வருகிறது. இந்த கலாச்சாரத்தை உடைக்க வேண்டும் என பா.ஜ.க.,வும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் நினைக்கின்றன.

உங்கள் அன்பு மற்றும் சகோதரத்துவம் மீது தாக்குதல் நடத்துகின்றன. நீங்கள் பலவீனமடைந்ததன் காரணமாக மாநில உரிமையை மத்திய அரசு பறித்துக் கொண்டது. காஷ்மீர் மாநில உரிமையை வழங்க வேண்டும். நேற்று மாதா வைஷ்ணவ் தேவி கோவிலுக்கு சென்றேன்.

அங்கு மாதா துர்கா, மாதா லட்சுமி, மாதா சரஸ்வதி உள்ளனர். கடவுள் துர்கா நம்மை காக்கிறார். லட்சுமி, வலிமை, சக்தியின் சின்னமாகவும், சரஸ்வதி கல்வி மற்றும் அறிவின் அடையாளமாக திகழ்கின்றனர். இந்த மூன்று சக்திகளும் ஒன்று சேரும் போது, உங்கள் வீடும் நாடும் வளர்ச்சி பெறும். ஆனால், பா.ஜ.க., அரசின் கொள்கைகளான, ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு ஆகியவை மூலம் நாட்டின் வலிமை பாதிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad