கை நீட்டிய திமுக அமைச்சர்: கோட்டை முழுக்க இதுதான் பேச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 10, 2021

கை நீட்டிய திமுக அமைச்சர்: கோட்டை முழுக்க இதுதான் பேச்சு!

கை நீட்டிய திமுக அமைச்சர்: கோட்டை முழுக்க இதுதான் பேச்சு!

கட்சி, ஆட்சி எதிலும் எந்தப் புகாரும் வந்துவிடக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறார்.
திமுக மீதான பழைய விமர்சனங்களையும் மாற்றிக் காட்டும் விதமாக செயல்பட வேண்டும் என ஸ்டாலின் ஒரு பக்கம் சொல்ல அமைச்சர்கள் சிலருக்கோ அவர் சொல்வது காதில் விழுவதில்லை என்கின்றனர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களை, எம்.எல்.ஏக்களை சந்திக்கும் போதும் சர்ச்சைகள் எழும்பும் வகையில் தான் சில சீனியர் அமைச்சர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன என்கின்றனர்இந்த சூழலில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு போக்கும் வரத்துமாக இருந்த அமைச்சர் ஒருவர் தனது பிஏவையும், பிஎஸ்ஓவையும் பளார் என அடித்து விட்டார் என்ற செய்தி கோட்டை வட்டாரத்தில் உலா வருகிறது.

அடி வாங்கிய இருவரும் அமைச்சர் பெயரை பயன்படுத்தி கலெக்‌ஷனில் ஈடுபட்டதாக ஒரு தகவல் உள்ளது. மற்றொரு பக்கம் விசாரித்தால் சட்டசபையிலிருந்து அமைச்சர் வெளியே வரும் போது பிஏவும், பிஎஸ்ஓவும் இல்லையாம். அமைச்சர் அந்த இருவருக்காக காத்திருந்து அலுத்துப் போய் அவராகவே காரை எடுத்துச் சென்றுவிட்டாராம். வீட்டிற்கு போய் அவர்களுக்கு பளார் விட்டதாகவும் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad