மின் கட்டண கொள்ளைன்னு சொல்றது பொய்... இயக்குநர் தங்கர்பச்சானை சபையில் சாடிய அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 7, 2021

மின் கட்டண கொள்ளைன்னு சொல்றது பொய்... இயக்குநர் தங்கர்பச்சானை சபையில் சாடிய அமைச்சர்!

மின் கட்டண கொள்ளைன்னு சொல்றது பொய்... இயக்குநர் தங்கர்பச்சானை சபையில் சாடிய அமைச்சர்!

திமுக ஆட்சியில் மக்களின் சிரமத்தை அறிந்து கோவிட் காலத்தில் மின் வாரியத்திற்கு மக்கள் செலுத்தவேண்டிய 419 கோடி பணம் வசூல் நிருத்தப்பட்டதால் மக்கள் பெரிதும் பயன் பெற்றனர் - பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

கோவிட் காலத்தில் மின் கட்டணம் செலுத்துவதில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பேரவையில் குற்றம்சாட்டினார். இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து பேசியதாவது:

கொரோனா காலமான 2020 ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டில் 3,023 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலமாக 789 கோடி ரூபாய் வருமானம் வந்தது. ஆனால் 2021 ஜூலையில் 4,494 மில்லியன் யூனிட் பயன்படுத்தப்பட்டது. 1,471 மில்லியன் யூனிட் அதிகமாக பயன்படுத்தப்பட்டதால் மின் வாரியத்துக்கு 10 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

இதுவே 2021 ஆகஸ்ட் மாதத்தில், முந்தைய ஆண்டைவிட 987 மில்லியன் யூனிட் மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் 3% மட்டுமே கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

கோவிட் காலத்தில் முன்வைப்புத் தொகை வசூலிக்க வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் ஏழை மக்கள் செலுத்தவேண்டிய 419 கோடி ரூபாய் வசூலிப்பு தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களின் சிரமத்தை அறிந்து கோவிட் காலத்தில் மின் வாரியத்திற்கு மக்கள் செலுத்தவேண்டிய 419 கோடி பணம் வசூலிக்கப்படாததால் மக்கள் பெரிதும் பயன் பெற்றனர்.

மின்சார கட்டணம் கொள்ளை அடிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் இயக்குனர் தங்கர்பச்சான் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் 250 வீடுகளில் ஆய்வு செய்ததில் ஒன்றில் மட்டும் குறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



அந்த வீட்டிலும் ஒரே மீட்டரில் இரண்டு இணைப்புகள் வைக்கப்பட்டதால் அந்த பிரச்சனை இருந்ததே தவிர சமூக வலைதளங்களில் வந்தது எதுவுமே உண்மை இல்லை. அனைத்தையும் ஆராய்ந்து முறையாக கணக்கெடுத்து மின்சாரம் வசூலிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad