டைம் முடிஞ்சும் விடாமல் கதறவிடும் காங்கிரஸ்; கறார் காட்டும் திமுக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 23, 2021

டைம் முடிஞ்சும் விடாமல் கதறவிடும் காங்கிரஸ்; கறார் காட்டும் திமுக!

டைம் முடிஞ்சும் விடாமல் கதறவிடும் காங்கிரஸ்; கறார் காட்டும் திமுக!

தமிழகத்தில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து, இன்று பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் போதிய இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. தென் மாவட்டமான தென்காசியில் காங்கிரஸ் கட்சிக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இழுபறியில் நீடிக்கும் பேச்சுவார்த்தை

ஏனெனில் இப்பகுதியில் காங்கிரஸ் கட்சி ஓரளவு செல்வாக்கு பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் வட மாவட்டங்களில் 3 முதல் 5 சதவீத இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி மற்றும் கள்ளக்குறிச்சியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்த பின்னரும், பேச்சுவார்த்தை இழுபறியில் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் சீட் ஒதுக்கப்படாத இடங்களிலும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

எந்தெந்த மாவட்டங்களில் சிக்கல்

ஒருவேளை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டால் குறிப்பிட்ட நபர்களை மட்டும் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்ள அறிவுறுத்துவர். இல்லையெனில் அதிருப்தி வேட்பாளர்கள் போன்று தேர்தலில் போட்டியிடுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சிக்கலான நிலை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் நீடிப்பதாக சொல்லப்படுகிறது.

கறார் காட்டிய திமுக


இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர், விழுப்புரத்தில் உள்ள 28 வார்டு கவுன்சிலர் சீட்களில் ஒன்றை கூட திமுக எங்களுக்கு தரவில்லை. விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் போட்டியிடுவதற்கு ஆர்வம் தெரிவித்தும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மிகவும் கறாராக திமுக தரப்பு நடந்து கொண்டது. எங்களுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற கூட்டணி கட்சிகளின் நிலையை எண்ணிப் பாருங்கள் என்று வேதனை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad