திமுக அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு: டெல்லி கோபத்துக்கு ஆளாகும் ஸ்டாலின்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

திமுக அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு: டெல்லி கோபத்துக்கு ஆளாகும் ஸ்டாலின்?

திமுக அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு: டெல்லி கோபத்துக்கு ஆளாகும் ஸ்டாலின்?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகள், இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ச்சியாக ரெய்டு நடத்தி பரபரப்பை கூட்டியது. பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சில வாரங்களாக நடைபெற்ற நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் அடுத்தடுத்து ரெய்டுகள் இனி நடைபெறும் என கூறப்பட்டது. இந்த சமயத்தில் திமுக அமைச்சர்களை குறிவைத்து டெல்லியிலிருந்து ரெய்டுகள் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுக பாஜக கூட்டணியை முறியடித்து திமுக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆட்சியமைத்த கையோடு அதிரடி நடவடிக்கைகளை மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். கொரோனா சிகிச்சைக்கான தடுப்பு மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன் என பல விஷயங்களில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு மறைமுகமாக புறக்கணித்தாலும் அதையெல்லாம் மீறி கொரோனாவை வெற்றிகரமாக கையாண்டு பாதிப்பை குறைத்தார். ஸ்டாலின் அணுகுமுறையிலும் முதிர்ச்சியும், பக்குவமும் இருப்பதாக தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன.

மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுகவுக்கு ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் நாடு முழுவதும் நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது. அத்துடன் 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிராந்திய கட்சிகள் அணி திரள வேண்டும் என வலியுறுத்தி ஸ்டாலின் முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார்.

மேலும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரும் மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ, மூன்று வேளாண் சட்டங்கள் ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இவை கவனம் பெற்றுள்ளன. பாஜகவுக்கு எதிராக அணி வகுக்கும் கட்சிகளுக்கு ஸ்டாலினின் அணுகுமுறை முன்னுதாரணமாக விளங்கும் வகையில் உள்ளது. இதை பாஜக அரசு ரசிக்கவில்லையாம். மாறாக திமுகவை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்க வேண்டும் என்றும் திட்டமிடுகிறதாம்.

இதனால் அமலாக்கத்துறையை பயன்படுத்தி திமுக சீனியர் அமைச்சர்கள் சிலரை குறி வைத்து ரெய்டு நடத்த திட்டமிடுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் திமுக மீது தற்போது உருவாகிவரும் நல்ல அபிப்ராயம் சிதையும் என்றும் அவர்களுக்கு வைக்கும் நல்ல செக்காக இது இருக்கும் என்கிறார்கள் ஒன்றிய அரசுக்கு நெருக்கமாக இருக்கும் சிலர். ஆனால் வேறு சிலரோ இந்த சமயத்தில் அப்படி ஒரு ரெய்டை நடத்தினால் திமுக தான் அதனால் பலனடையும் என்கிறார்கள்.

ஒன்றிய அரசு கொண்டுவந்த சட்டங்களுக்கு எதிராக மசோதா நிறைவேற்றிய பின் இதுபோன்று ரெய்டு நடத்தினால் திமுகவை இதற்காக தான் குறிவைக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும். திமுக அதை எளிதாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றுவிடும். குஜராத், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா, இமாச்சல் பிரதேசம் தேர்தல்கள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்துக்கு அது பயன்படும் எனவும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே பாஜக அரசு திமுக மீது உடனடியாக குறிவைக்கப் போகிறதா அல்லது கொஞ்சம் விட்டுப்பிடிக்கப் போகிறதா என்பது அடுத்த சில வாரங்களில் தெரியவரும். ஆனால் தேசிய அரசியலில் ஸ்டாலின் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளத் தொடங்கிவிட்டார் என உறுதியாகச் சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad