கண்ணீர் விட்ட ஸ்டாலின்: இவ்வளவு இளகிய மனம் படைத்தவரா நமது முதல்வர்!
முதல்வர் ஸ்டாலின் தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தி அதனை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் தனிக்கவனம் செலுத்துபவர். சைக்கிளிங் செல்வது, ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது என தொடர்ந்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள மெனக்கெடுபவர். இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகும்.
எவ்வளவோ பணிச்சுமைகள் இருந்தாலும், உடற்பயிற்சி செய்ய அவர் தவறுவதில்லை. தினமும் காலையில் மறக்காமல் வாக்கிங் சென்று விடூவார். இப்போது முதல்வராக இருக்கும் போது மட்டுமல்லாமல்
எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் கூட வாக்கிங் செல்லும்போது பொதுமக்களிடம் உரையாடி அவர்களது குறைகளை கேட்டறிவது அவரது வழக்கம்.
அந்த வகையில், இயற்கை எழில் கொஞ்சும் சென்னை அடையாறு தியோசபிக்கல் சொசைட்டி வளாகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் உடன் சென்றிருந்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலினுடன் நடுத்தர வயது பெண் ஒருவர் சகஜமாக உரையாடினார். ஸ்டாலினும் எளிமையாக அவரிடம் பதிலளித்து பேசினார். இந்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், தியோசபிக்கல் சொசைட்டிக்கு ஸ்டாலின் வாக்கிங் சென்றதன் பின்னணி குறித்த உருக்கமான சம்பவம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. முன்பெல்லாம் முதல்வர் ஸ்டாலின் சென்னை ஐஐடி பகுதியில்தான் பெரும்பாலும் காலையில் வாக்கிங் செல்வது வழக்கம். அவருடன் மா.சுப்பிரமணியனும் உடன் செல்வார்.
அப்படி ஸ்டாலின் செல்லும்போது, மாற்றுத்திறனாளியான சிறுவன் வில்சன், அவருக்கு தினமும் தனது வீட்டு வாசலில் இருந்து கை காட்டுவான்.
ஸ்டாலினும் அந்த சிறுவனுக்கு கை காட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். சிறுவனின் வீடு வந்தால் தானாகவே அந்த பக்கம் திரும்பி விடுவார் ஸ்டாலின். சுமார் ஒர் ஆண்டாக இந்த பழக்கம் சென்று கொண்டிருக்க திடீரென அந்த சிறுவனை ஒரு நாள் காலையில் காணவில்லை. இதுகுறித்து மா.சுப்பிரமணியனிடம் ஸ்டாலின் விசாரிக்க சொல்லியுள்ளார்.
இவரும் விசாரிக்க சிறுவனுக்கு உடம்பு சரியில்லை என்று அவனது குடும்பத்தினர் சொல்லியுள்ளனர். இதனிடையே ஸ்டாலினும் சென்னையில் இருந்து வேறு ஒரு ஊருக்கு சென்று விட்டார். அவர் திரும்புவதற்குள் சிறுவன் வில்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டான். இந்த தகவலை ஸ்டாலினுக்கு மா.சுப்பிரணியன் செல்போனில் சொன்ன போது, ஸ்டாலின் விசும்பி கண்ணீர் விட்டுள்ளார். சிறுவனின் இறுதி சடங்குகளை அருகில் இருந்து மா.சுப்பிரமணியனை செய்ய சொன்ன ஸ்டாலின், அதன்பிறகு அந்த பக்கமே போக வேண்டாம்; போனால் சிறுவன் வில்சன் நியாபகம் வரும் என்று தெரிவித்து விட்டாராம்.
மேற்கண்ட இந்த தகவலை கடந்த 2019ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்ச்சி ஒன்றில் பங்கேற்ற இப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்த பின்னணியில்தான் தியோசபிக்கல் சொசைட்டி வளாகத்திற்கு காலை நடைபயிற்சியை ஸ்டாலின் மாற்றிக் கொண்டார் என்கிறார்கள்.
No comments:
Post a Comment