மதுரையில் உருவாகும் பிரமாண்டம்: முதல்வர் நடத்திய ஆலோசனை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

மதுரையில் உருவாகும் பிரமாண்டம்: முதல்வர் நடத்திய ஆலோசனை!

மதுரையில் உருவாகும் பிரமாண்டம்: முதல்வர் நடத்திய ஆலோசனை!

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தார். ஆசியாவிலேயே மிக முக்கிய நூலகமாக பிரமாண்டமாக அது உருவானது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் முதல்வராக முதன்முறையாக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில் கலைஞரின் வழியில் அவரது பெயரில் மதுரையில் பிரமாண்டமாக நூலகம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

70 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள கலைஞர் நூலகத்தின் கட்டிட வடிவமைப்பை இறுதி செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர், அதிகாரிகளுடன் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சிறப்பு செயலாளர் ரவீந்திரபாபு, மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரகுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “மதுரையில் கலைஞர் நூலகம் மக்களை கவரும் நிலையில் வடிவமைக்கப்பட வேண்டும். கலைஞரின் பெயரை நினைவுக்கூரும் வகையில் அமைய வேண்டும். எனவே, அதுபோன்று வடிவமைப்புகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இந்த நூலகத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது. அதற்கேற்ப உலகத்தரம் வாய்ந்த வகையில் நூலகம் அமைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலின் கூறியபடி கட்டிட வடிவமைப்பில் மாற்றங்கள் செய்து, மீண்டும் முதல்வரிடம் காட்டி ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad