பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்!

பள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல்; கல்வி அமைச்சர் சொன்ன ஷாக் தகவல்!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 9-12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் வரவழைக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. வகுப்பறைகளில் 50 சதவீத மாணவர்கள் வீதம் சுழற்சி முறையில் மாணவர்கள் அமர இருக்கைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் மாணவர்கள், ஆசிரியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட நபர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.


பள்ளிகள் திறப்பு

அடுத்தகட்டமாக அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது அலை குறித்த அச்சம் குறைந்த பின்னர், மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்து பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் வழங்க ஏற்பாடு


இந்நிலையில் சென்னை அடையாரில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து பள்ளிகளிலும் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏதாவது ஒரு காரணத்தால் முகக்கவசம் இல்லாமல் வரும் மாணவர்களுக்கு, பள்ளிக்குள் நுழையும் போதே முகக்கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இடமாறுதல்

எந்தவொரு மாணவரையும் பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. தென் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் விகிதத்தை விட, அதிக ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் வட மாவட்டங்களில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தேவை உள்ளது. எனவே தேவைப்படும் வட மாவட்ட பள்ளிகளுக்கு தெற்கில் இருந்து ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் கொரோனா காலப் பிரச்சினைகளால் ஊதியம் இன்றி தவிப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே அவர்களுக்கு போதிய ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெரும்பாலும் அரசு ஆசிரியர்கள் தங்களது சொந்த மாவட்டத்திலேயே பணி நியமனம் பெற்றிருப்பர். இந்த சூழலில் தென் மாவட்டங்களில் இருந்து வட மாவட்டங்களுக்கு பணி நியமனம் செய்வதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆசிரியர்கள் ஆளாகக் கூடும் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad