மகப்பேறு கால விடுப்பு: தலைமைச் செயலாளர் கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

மகப்பேறு கால விடுப்பு: தலைமைச் செயலாளர் கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

மகப்பேறு கால விடுப்பு: தலைமைச் செயலாளர் கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

திமுக தனது தேர்தல் அறிக்கையில் மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.


நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும். இரண்டிற்கும் குறைவான குழந்தைகள் உள்ள மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி 1.7.2021 முதல் செயல்படுத்தப்படும்” என்று அறிவித்தார். அதற்கான அரசாணை ஆகஸ்ட் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.

பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்பட்ட அரசாணை குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு விளக்கம் அளித்துள்ளார்.



இது குறித்து அனைத்து அரசு துறைகளுக்கும், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “அரசாணை வெளியாவதற்கு முன்பே 9 மாத பேறுகால விடுப்பில் சென்றவர்களும், 12 மாத பேறுகால விடுப்புக்கு தகுதி உடையவர்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 மாத கால விடுப்பு முடிந்தும், பணிக்கு திரும்பாமல் விடுப்பில் உள்ளவர்களுக்கும், அது பணி நாளாகவே கருதப்படும். முன்னர் விடுப்பில் சென்று, பணிக்கு திரும்பாத அனைவருக்கும் 12 மாத கால பேறுகால விடுப்பு பொருந்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அரசாணை ஏற்கெனவே பெண்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தலைமைச் செயலாளரின் இந்த விளக்கமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad