அக்., 8 வரை ஸ்டாலினுக்கு பெரிய ஆறுதல்; உயர் நீதிமன்றம் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, September 18, 2021

அக்., 8 வரை ஸ்டாலினுக்கு பெரிய ஆறுதல்; உயர் நீதிமன்றம் உத்தரவு!

அக்., 8 வரை ஸ்டாலினுக்கு பெரிய ஆறுதல்; உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக முதல்வராக முதல்முறை பொறுப்பேற்று, மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஒருபுறம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டே, ஏராளமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி கொண்டிருக்கிறார். இந்த சூழலில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர், அமைச்சர்களை விமர்சனம் செய்ததாக ஸ்டாலின் மீது 18 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.


நேரில் ஆஜராக சம்மன்

இந்த வழக்குகள் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதில் சில வழக்குகளில் ஸ்டாலின் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் இந்த வழக்குகளை எல்லாம் திரும்பப் பெறுவதாக தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இதற்கிடையில் வழக்கு ஒன்றின் தீர்ப்பில், எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதற்கு முன்பு,

அரசு தரப்பு வாதம்


அதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலை மாநில அரசுகள் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மு.க.ஸ்டாலின் தரப்பில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மு.க.ஸ்டாலின் தரப்பில் வழக்கறிஞர் செந்தில்முருகன் ஆஜரானார். அவர், கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மற்றொரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அதில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கொடூர வழக்குகளை சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு திரும்பப் பெறக்கூடாது என்று கூறியுள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் மீதான இந்த 18 வழக்குகளும் முன்னாள் முதல்வர், அமைச்சர்களை விமர்சித்து பேசியதற்காக மட்டுமே தொடரப்பட்டவை என்று வாதிட்டார். அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த மனுக்கள் மீதான தீர்ப்பு அக்டோபர் 8ஆம் தேதி பிறப்பிக்கப்படும். அதுவரை அவதூறு வழக்குகளில் நேரில் ஆஜராகும்படி மு.க.ஸ்டாலினை சிறப்பு நீதிமன்றம் வலியுறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad