அதிமுகவில் இருந்து எதற்காக வெளியேறினேன் என தெரியவில்லை - முன்னாள் அமைச்சர் பேச்சு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 24, 2021

அதிமுகவில் இருந்து எதற்காக வெளியேறினேன் என தெரியவில்லை - முன்னாள் அமைச்சர் பேச்சு!

அதிமுகவில் இருந்து எதற்காக வெளியேறினேன் என தெரியவில்லை - முன்னாள் அமைச்சர் பேச்சு!

நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆலோசனை கூட்டம் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் காட்டாற்று வெள்ளம் எனவும், அதிலிருந்து வெளியேறி நான் உட்பட பலர் கட்சிகளில் இருந்துள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அதிமுகவில் இருந்து நான் ஏன் வெளியேறினேன் என்று கேட்டாள் அதற்கான காரணம் எனக்கு தெரியாது, எது எப்படி இருந்தாலும் அதிமுக வாழ வேண்டும் அதற்கான முழு அக்கறை எனக்கு உள்ளது என்று பேசினார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் இரண்டு முறை அதிமுக சார்பில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அதிமுக அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad