யார் இந்த பூபேந்திர படேல்? - புதிய முதல்வர் குறித்த சுவாரசிய தகவல்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, September 12, 2021

யார் இந்த பூபேந்திர படேல்? - புதிய முதல்வர் குறித்த சுவாரசிய தகவல்கள்!

யார் இந்த பூபேந்திர படேல்? - புதிய முதல்வர் குறித்த சுவாரசிய தகவல்கள்!

குஜராத் மாநில முதலமைச்சராக யாரும் எதிர்பாராத வகையில், பா.ஜ.க. - எம்.எல்.ஏ., பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி, டெல்லி பா.ஜ.க., மேலிடம் அறிவுறுத்தலின்படி, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். குஜராத் மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜய் ரூபானி ராஜினாமா செய்தது, மாநில அரசியலில் புயலைக் கிளப்பியது.

இந்நிலையில், குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகரில் நடைபெற்ற பா.ஜ.க - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை பா.ஜ.க. குழுத் தலைவராக, எம்.எல்.ஏ., பூபேந்திர படேல் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக அவர் பதவி ஏற்க உள்ளார். நாளை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பதவி ஏற்பு விழாவில், பூபேந்திர படேல் மட்டும் முதலமைச்சராக பதவி ஏற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிறகு, அமைச்சரவை பதவி ஏற்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், புதிய முதலமைச்சர் பூபேந்திர படேல் குறித்த சில சுவாரசிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தர பிரதேச மாநில ஆளுநரும், குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான ஆனந்திபென் படேலுக்கு நம்பிக்கைக்குரியவராக கருதப்படும் பூபேந்திர படேல், கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் படேலை விட 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்தார்.

அகமதாபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவராகவும் அம்தவாட் மாநகராட்சியின் நிலைக்குழு தலைவராகவும் பூபேந்திர படேல் பதவி வகித்துள்ளார். அகமதாபாத் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், கட்டட பொறியியலில் பட்டய படிப்பு முடித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு, தனக்கு 5 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தேர்தல் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், படேல் சமூகத்தை சேர்ந்த பூபேந்திர படேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த சமூகத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர்களான மன்சுக் மாண்ட்வியா, பர்ஷோத்தம் ரூபாலா, லட்சத்தீவு நிர்வாக அலுவலரான பிரஃபுல் கோடா படேல், குஜராத் மாநில வேளாண் துறை அமைச்சர் ஆர்.சி. ஃபால்டு ஆகியோரிலிருந்து ஒருவர் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக பா.ஜ.க., வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், பூபேந்திர படேலை முதல்வராக தேர்வு செய்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவரது தலைமையில், குஜராத் மாநிலத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை பா.ஜ.க., வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்

No comments:

Post a Comment

Post Top Ad