ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய நடிகர்: தமிழ்நாட்டுக்கு வெளியேயும் கவனிக்குறாங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய நடிகர்: தமிழ்நாட்டுக்கு வெளியேயும் கவனிக்குறாங்க!

ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய நடிகர்: தமிழ்நாட்டுக்கு வெளியேயும் கவனிக்குறாங்க!

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்து நான்கு மாதங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை திமுக அரசு பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரணம், வாக்குறுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றம், எதிர்கட்சிகளையும் அரவணைத்து செல்வது என பல்வேறு தரப்பினரின் வாழ்த்துகளையும் ஸ்டாலின் பெற்றுள்ளார்.
சட்டசபையில் எலியும் பூனையுமாக இருக்கும் திமுகவும் அதிமுகவும் வலம் வரும். ஆனால் தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களே ஸ்டாலின் அணுகுமுறையை பாராட்டி வருகின்றன. பிற மாநிலங்களிலிருந்தும் பாராட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் ஜனசேனா தலைவரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யான் தனது ட்விட்டர் பக்கத்தில், ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் அந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், "அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.



எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகளால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad