மகிழ்ச்சியில் கலை, அறிவியல் கல்லூரிகள் மாணவர்கள்; அமைச்சர் அதிரடி!
தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பல்வேறு துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த சூழலில்
நேற்றைய கேள்வி நேரத்தின் போது கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மா.செந்தில்குமார் பேசுகையில், மாணவ, மாணவிகளின் நலன் கருதி கள்ளக்குறிச்சியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பொன்முடி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 5 சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளும், 3 அரசு கலைக் கல்லூரிகளும், 22 சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.
பொறியியல் கல்லூரி கோரிக்கை
எனவே கள்ளக்குறிச்சியில் அரசு
பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக பொறியியல் கல்லூரிகள் அமைக்கும் போது, அதன் கட்டிடம், விடுதிகள், இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்கும் செலவு 96 கோடி ரூபாய் ஆகும். மேலும் ஆண்டு ஊதியமாக 17.18 கோடி ரூபாய் செலவாகும். தற்போதைய சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,380 மாணவர்களை சேர்க்கலாம். ஆனால் கடந்த 2020-21 கல்வியாண்டில் 462 பேர் மட்டுமே சேர்ந்து இருக்கிறார்கள்
No comments:
Post a Comment