மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடருமா? தமிழக அரசு தகவல்!
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் சீற்றம் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்தளவிற்கு தினசரி தொற்று, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பெரிதும் குறைந்திருக்கிறது. மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், அதற்கான முன்னேற்பாடுகள்
ஒருபக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் ஓராண்டிற்கும் மேலாக வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மாணவர்களுக்கு விடுதலை கொடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகளை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, இன்று (செப்டம்பர் 1) முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
பொதுநல மனு தாக்கல்
பள்ளிகளைப் பொறுத்தவரை 9-12ஆம் வகுப்பிற்கும் மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். அடுத்தகட்டமாக மற்ற மாணவர்களையும் அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் நெல்லையை சேர்ந்த அப்துல் வகாபுதீன் என்ற நபர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை
தாக்கல் செய்திருந்தார். அதாவது, 9-12ஆம் வகுப்பு மாணவர்கள் இரு தவணை தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளாமல் பள்ளி செல்வது கொரோனா நோய்த்தொற்று பரவலை அதிகரிக்க செய்யக்கூடும்.
தொற்று பரவும் அபாயம்
எனவே நேரடி வகுப்புகளை நடத்தாமல், ஆன்லைன் வழி உள்ளிட்ட இதர வழிகளில் மாணவர்கள் வகுப்புகளை தொடர உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆனந்த் ஆஜரானார். அவர் வாதிடுகையில்,
கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பள்ளிகளை திறந்தால் மாணவ, மாணவிகளை கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் மூலம் தொற்று பரவும் அபாயம் உள்ளது என்றார்.
No comments:
Post a Comment