சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்!

சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் மக்கள்!

ஓ.எம்.ஆர். சாலையிலுள்ள 4 சுங்கச்சாவடிகள் மூடப்பட்டதை தொடர்ந்து மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் 24 சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் ஒழிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. ஏற்கெனவே எரிவாயு விலை உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்கிறது என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் விலை வாசி உயர்வு ஏற்படுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.

ரூபாய் 5 முதல் 15 வரை 24 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓ.எம்.ஆர். சாலையிலுள்ள 4 சுங்கச்சாவடிகளை மூடிவிட்டு 24 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்தியது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள், லாரி, பேருந்து, கார் உரிமையாளர்கள், சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடி கட்டண உயர்வில் உறுதியாக உள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ள 24 சுங்கச் சாவடிகளின் விபரங்கள் பின்வருமாறு...


ஆத்தூர் (தாம்பரம்-திண்டிவனம்)

நல்லூர் (சென்னை - தடா)

பரனூர் (தாம்பரம்- திண்டிவனம்)

சூரப்பட்டு (சென்னை பைபாஸ்)

வானகரம் (சென்னை பைபாஸ்)

வாணியம்பாடி (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)

கிருஷ்ணகிரி (ஓசூர்-கிருஷ்ணகிரி)

லம்பலக்குடி (திருச்சி-காரைக்குடி)


லட்சுமணப்பட்டி (திருச்சி-காரைக்குடி)

போகலூர் (மதுரை-ராமநாதபுரம்)

நாங்குநேரி (நெல்லை-அஞ்சுகிராமம்)

பூதக்குடி (திருச்சி பைபாஸ்-தோவரங்குறிச்சி-மதுரை)

பழையா (கந்தர்வகோட்டை, தஞ்சாவூர்-புதுக்கோட்டை)

பள்ளிகொண்டா (கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை)


சித்தம்பட்டி (திருச்சி பைபாஸ்,

தோவரங்குறிச்சி-மதுரை)

பட்டரைப்பெரும்புதூர் (திருப்பதி-திருத்தணி-சென்னை)

புதுக்கோட்டை (வாகைக்குளம்)

(திருநெல்வேலி-தூத்துக்குடி)

எஸ் வி புரம் (திருப்பதி-திருத்தணி-சென்னை)

சாலைப்புதூர் (மதுரை-திருநெல்வேலி-

பனகுடி-கன்னியாகுமரி)


செண்பகம்பேட்டை (திருமயம்-மானாமதுரை)

No comments:

Post a Comment

Post Top Ad