Vijayalakshmi Panneerselvam Death: ஓபிஎஸ் மனைவி மரணம்: ஆறுதல் சொன்ன முதல்வர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

Vijayalakshmi Panneerselvam Death: ஓபிஎஸ் மனைவி மரணம்: ஆறுதல் சொன்ன முதல்வர்!

Vijayalakshmi Panneerselvam Death: ஓபிஎஸ் மனைவி மரணம்: ஆறுதல் சொன்ன முதல்வர்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (63). இவர் கடந்த இரண்டு வாரங்களாகவே அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் விஜயலட்சுமி இருந்தார்.


இந்நிலையில், இன்று (செப்டம்பர் 1) காலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஓ பன்னீர்செல்வம்- விஜயலட்சுமிக்கு தம்பதிக்கு கவிதாபானு என்ற மகளும், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கும் விஜயலட்சுமியின் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினர்.ஓ பன்னீர் செல்வத்தின் கையை பிடித்துக் கொண்டு மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அதிமுக எம்.எல்.ஏக்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்னும் சில மணி நேரத்தில் விஜயலட்சுமியின் உடல் மருத்துவமனையில் இருந்து சென்னை தி.நகரில் உள்ள ஓபிஎஸ்சின் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் ஓபிஎஸ்ஸின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad