ஆரம்பப் பள்ளிகள் திறப்பு: அரசு எடுக்கும் முடிவு என்ன?
தமிழ்நாட்டில் பல மாதங்களுக்குப் பின்னர் இன்று (செப்.1) முதல் உயர்நிலை,
மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த மாதத்திலேயே தொடக்க, நடுநிலைப் பள்ளிகளையும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் சரவணன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
வேலூா் ஆசிரியா் இல்லத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 ,10, 11, 12 ஆகிய
வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
இதேபோல 23,928 தொடக்கப் பள்ளிகள், 7,260 நடுநிலைப் பள்ளிகளில் 30 லட்சம் மாணவா்கள் படிகின்றனா். 18 மாதங்களாகப் பள்ளிகள் திறக்கப்படாததால், மாணவா்கள் எழுத்துக்களையே மறந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை செப்டம்பா் மாதத்திலேயே திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேரடி ஆசிரியா் நியமனத்தில் பொதுப்பிரிவினருக்கு 40 வயதாகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல்
இனங்களைச் சோந்தவா்கள், விதவைகளுக்கு 45 வயதாகவும் நிா்ணயித்திருப்பதை அரசு திரும்பப் பெற வேண்டும்.
No comments:
Post a Comment