அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?
மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்று நான்கு மாதங்களுக்கு மேலாகிறது. பத்தாண்டுகளுக்குப் பின்னர் திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. மே மாதம் முதல்
இப்போதுவரை பெரியளவில் ஆட்சி மீது விமர்சனங்கள் எழவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவலை வேகமாக கட்டுப்படுத்தியது, நிவாரணப் பணிகளை துரிதமாக செயல்படுத்தியது, மேலும் பல முக்கிய துறைகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது என அரசுக்கு வரவேற்பு கிடைத்ததற்கு அமைச்சர்களின் செயல்பாடுகளும் உள்ளன.
அனுபவம் வாய்ந்தவர்கள், புது முகங்கள் கலந்த அமைச்சரவையாக திமுக அமைச்சரவை உள்ளது. வாய்ப்பளித்து, சுதந்திரமாக செயல்பட இடமளிக்கிறார் என ஸ்டாலினின் அணுகுமுறை குறித்து கூறுகிறார்கள். ஆனால் அவரையே அதிருப்திக்குள்ளாக்கும் வகையில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
திமுக மீது இதற்கு முன் வைக்கப்பட்ட எந்த விமர்சனமும் இம்முறை வைக்கப்பட்டுவிடக்கூடாது
என்பதில் ஸ்டாலின் கவனமாக உள்ளார். உதாரணத்திற்கு வாரிசு அரசியல் செய்யும் கட்சி என்று கூறுவார்கள் என்பதற்காகவே தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடமளிக்கவில்லை.
No comments:
Post a Comment