அண்ணாமலையை குழப்பிய நடிகர் விஜய்..! பாஜகவின் நிலைப்பாடு இதுதான்
விஜய் மக்கள் இயக்கத்தினர் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தலைமை அனுமதி அளித்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து, முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த வேட்பாளர்கள் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இதனிடையே, நடிகர் விஜய் தனது பெயரைப் பயன்படுத்தி எந்தக் கூட்டத்தையும் செயல்பாடுகளையும் நடத்துவதைத் தடுக்ககோரி அவரது பெற்றோர் உட்பட 11 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் சிவில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு செப்டம்பர் 27 -ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
இந்நிலையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் ஜனநாயக முறைப்படி தேர்தலில் நிற்கலாம் என்றும் ஆனால் என்னுடைய பெயரை அதற்கு பயன்படுத்த வேண்டாம் என்றுதான் விஜய் அறிவுறுத்துவதாக கூறப்படுகிறது.
ஆனால், திருப்போரூரில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த வேட்பாளர்கள் கையில் 'உன்னால் முடியும்' என்ற வாக்கியத்துடன் விஜயின் படம் பொறிக்கப்பட்ட கொடியை வைத்திருந்தனர். இந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியலுக்கு தற்போது இல்லையென்றாலும் அவருக்கு அரசியல் வரும் ஆர்வம் இருக்கிறது என்பது பட காட்சிகள், வசனங்கள், மேடை பேச்சுக்கள் மூலம் ஓரளவுக்கு புரிய வைக்கிறது.
ஆனால், ஒரு பக்கம் அவரது ரசிகர்கள் அவரது பெயரில் தேர்தலில் நிற்பதும், மற்றொரு பக்கம் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது போன்ற செயல்கள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே விஜய்க்கும் பாஜகவுக்கும் கருத்து மோதல்கள் இருந்து வரும் நிலையில் இப்போது தமிழகத்தில் உள்ள பாஜக தலைமை விஜயை அணுகுவது சற்றே மாறியுள்ளது.
No comments:
Post a Comment