பிரதமருக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்; அப்படியென்ன விஷயம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, September 20, 2021

பிரதமருக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்; அப்படியென்ன விஷயம்?

பிரதமருக்கு அவசர கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்; அப்படியென்ன விஷயம்?

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் முகாம்கள் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு அளித்து வரும் உதவிகள் மற்றும் தடுப்பூசி விநியோகத்திற்கு மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தடுப்பூசி விநியோகம்

இருப்பினும் தடுப்பூசி பயன்பாடு தொடர்பான அளவீடுகளில் தேசிய சராசரியை விட தமிழகம் பின்தங்கி இருக்கிறது. இதற்கு முதல் நான்கு மாதங்களில் போதிய அளவில் தடுப்பூசி விநியோகம் செய்யப்படாததே காரணம். இந்த விஷயத்தில் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், தடுப்பூசி கிடைத்த 2-3 நாட்களிலும் முழுவதுமாக தீர்ந்து விடுகின்றன. இந்த சூழலில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை அவசரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad