இப்படி செய்யாதீங்க கஷ்டமா இருக்கு: ரசிகர்களுக்கு ரஜினி ரசிகர் மன்றம் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

இப்படி செய்யாதீங்க கஷ்டமா இருக்கு: ரசிகர்களுக்கு ரஜினி ரசிகர் மன்றம் உத்தரவு!

இப்படி செய்யாதீங்க கஷ்டமா இருக்கு: ரசிகர்களுக்கு ரஜினி ரசிகர் மன்றம் உத்தரவு!

சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு
அண்ணாத்த திரைப்படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி காலையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். அதன் தொடர்ச்சியாக அன்றைய தினம் மாலையே படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடர்ந்து, அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பேனராக உருவாக்கிய ரஜினி ரசிகர்கள் சிலர், அதன் முன்பு ஆடு வெட்டி அதன் ரத்தத்தை பேனரின் மீது தெளித்துக் கொண்டாடினார்கள். இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் விமர்சனத்துக்குள்ளானது.இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணாத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி ரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad