பள்ளிகள் மீண்டும் மூட வாய்ப்பு? அதிர்ச்சி ரிப்போர்ட்..! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

பள்ளிகள் மீண்டும் மூட வாய்ப்பு? அதிர்ச்சி ரிப்போர்ட்..!

பள்ளிகள் மீண்டும் மூட வாய்ப்பு? அதிர்ச்சி ரிப்போர்ட்..!

கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைய தொடங்கிய நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக ஆன்லைன் வகுப்பில் பல மாணவர்கள் அரைகுறையாக கல்வி கற்று வரும் சூழலில் தமிழகம் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் இதை கருதி பள்ளிகளை மீண்டும் திறந்துள்ளன. ஆனால், கொரோனா இரண்டாம் அலை வெகுவாக குறைந்து நாளொன்றுக்கு 1500 பேர் வரையில் பாதிப்பு குறைந்தாலும் தமிழகத்தில்பள்ளிகள் திறந்த 14 நாட்களில் 83 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பல்வேறு மாவட்டங்களில் கணிசமான அளவில் மாணவர்கள் வருகை தந்துள்ள நிலையில் கல்வியில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டம் மட்டும் கடைசி இடத்தில் உள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு 83 மாணவர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள செய்தி பெற்றோருக்கு சற்று பயத்தை கொடுக்கும் தகவல்தான். இந்நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது சம்பந்தமாக செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை தொடக்கத்தில் உள்ளது என்று சண்டிகரின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கூறியிருப்பது திகில் கிளப்பியுள்ளது. அதுபோல,

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் ஞானேஸ்வர் கூறும்போது, குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் மூன்றாவது அலை தாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மூன்றாவது அலையின் வீரியம் குறைவாக இருக்கும் என்றும் தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பட்டியலில் வருவார்கள் என்ற மகிழ்ச்சையான செய்தியையும் அவர் கூறியுள்ளார். ஆனால், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் உடலில் உள்ள ஆன்டிபாடிகளின் அளவு குறையும்போது, மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதன்படி, அடுத்த மூன்று மாதங்களில் மனிதர்களின் ஆன்டிபாடிகளின் அளவு குறைந்தால், மூன்றாவது அலை தீவிரமாகும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி 70 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தால், கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், தடுப்பூசியின் சக்தி மூன்று மாதங்கள் கழித்து குறைய தொடங்கும் போது, கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த சூழலில் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை தடுப்பூசி போடுவது தொடங்கவில்லை. மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே தொடக்க பள்ளி மாணவர்களுக்கு போடுவது குறித்து சிந்திக்க முடியும். இந்நிலையில், தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது என்பது குறித்து முடிவெடுக்கும் போது அரசு மேற்கண்ட விஷயங்களை கருத்தில்கொள்வது அவசியம். தற்போது பள்ளிக்கு சென்று வரும் மாணவர்களின் ஆரோக்கியத்தில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வரும் நிலையில் தொடக்க பள்ளி சிறுவர்களை வரவழைப்பது சவாலான காரியம்.

No comments:

Post a Comment

Post Top Ad