வாகனங்களின் வேகத்திற்கு கட்டுப்பாடு: மத்திய அரசின் உத்தரவு ரத்து! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, September 14, 2021

வாகனங்களின் வேகத்திற்கு கட்டுப்பாடு: மத்திய அரசின் உத்தரவு ரத்து!

வாகனங்களின் வேகத்திற்கு கட்டுப்பாடு: மத்திய அரசின் உத்தரவு ரத்து!

கடந்த 2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் பல் மருத்துவர் ஒருவருக்கு, 90 சதவீத ஊனம் ஏற்பட்டது. இவருக்கான இழப்பீட்டு தொகையாக ரூ.18,43,908 லட்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.


இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அப்பெண்ணுக்கான இழப்பீட்டு தொகையை ரூ.1,49,80,548 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

அந்த உத்தரவில், எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 100 கிலோமீட்டர் வேகத்திலும் செல்லலாம் என்று மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சாலை மேம்பாட்டையும் இன்ஜின்களின் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் தான் வேகம் அதிகரித்து இருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம், 2018ஆம் ஆண்டு மத்திய அரசு வேகத்தை அதிகரித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், 2014ஆம் ஆண்டு அறிவிப்பின்படி, வாகனங்களுக்கு 60 முதல் 100 கிலோ மீட்டருக்கு இடையே வேகத்தை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, அதன் அடிப்படையில் புதிய அறிவிப்பை வெளியிட தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad