உள்ளாடையுடன் ரயிலில் வலம் வந்த எம்.எல்.ஏ.: இதுதான் காரணமாம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

உள்ளாடையுடன் ரயிலில் வலம் வந்த எம்.எல்.ஏ.: இதுதான் காரணமாம்!

உள்ளாடையுடன் ரயிலில் வலம் வந்த எம்.எல்.ஏ.: இதுதான் காரணமாம்!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர்தான் ரயில் பயணத்தின் போது உள்ளாடையுடன் வலம் வந்து பயணிகளின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து டெல்லிக்கு சென்ற தேஜஸ் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏ.சி., பெட்டியில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்.எல்.ஏ. கோபால் மண்டல் பயணித்துள்ளார். அப்போது, உள்ளாடையுடன் எம்.எல்.ஏ. கோபால் மண்டல் தனது கோச்சுக்குள் வலம் வந்துள்ளார்.

இதனை கண்ட பயணிகள் அவரது இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், சக பயணிகளுக்கும், எம்.எல்.ஏ. தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோபால் மண்டல் மீது சக பயணிகள் புகாரும் அளித்துள்ளனர். இதற்கிடையே, அவர் உள்ளாடையுடன் வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து எதிக்கட்சியினர் உள்பட பலரும் அவரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, எதற்காக அப்படி நடந்து கொண்டேன் என அவர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரயிலில் ஏறிய சிறிது நேரத்தில் தனக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் அடிக்கடி கழிவறை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால்தான் உள்ளாடையுடன் இருந்ததாக விளக்கம் அளித்துள்ளார்

No comments:

Post a Comment

Post Top Ad