சட்டப்பேரவைக்குள் ரகசிய சுரங்கம் கண்டுபிடிப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, September 3, 2021

சட்டப்பேரவைக்குள் ரகசிய சுரங்கம் கண்டுபிடிப்பு!

சட்டப்பேரவைக்குள் ரகசிய சுரங்கம் கண்டுபிடிப்பு!

டெல்லி சட்டப்பேரவையில் ரகசிய சுரங்கப்பாதை கண்டறியப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையானது சட்டப்பேரவையில் இருந்து டெல்லி செங்கோட்டையை இணைக்கும் வகையில் உள்ளதாகவும், ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திர போராட்ட வீரர்களை அழைத்து வர இது பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் டெல்லி சட்டப்பேரவ ை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ரகசிய சுரங்கம்

இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், “நான் 1993ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. ஆனதும் பலரும் இந்த சுரங்கப்பாதை குறித்து தெரிவித்தனர். இதனால் அதன் வரலாற்றை கண்டுபிடிக்க முயற்சி செய்தோம். ஆனால், தெளிவான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதையின் வாய் பகுதியை அதாவது ஒரு முனையை தற்போது கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், அதற்கு மேல் தோண்டவில்லை. ஏனெனில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சுரங்கப்பாதையின் பாதை அழிக்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கால சுரங்கம்ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொல்கத்தாவில் இருந்து 1912ஆம் ஆண்டு டெல்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டதும், தற்போது உள்ள சட்டப்பேரவை வளாகம்தான் அப்போது மத்திய சட்டசபையாக வளாகமாக பயன்படுத்தப்பட்டது. அதன்பின்னர், 1926ஆம் ஆண்டில் இந்த இடம் நீதிமன்றமாக மாற்றப்பட்டது. அந்தசமயத்தில், சுதந்திர போராட்ட வீரர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வர இந்த சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டது என்றும் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார்.ஆகஸ்ட் 15க்குள் மறுசீரமைக்கப்படும்
-15-

அத்துடன், இதனை மறு சீரமைத்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கவுள்ளதாக தெரிவித்த அவர், சீரமைப்பு பணிகள் ஆடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முடிந்து விடும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் இந்த இடம் மிகவும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் நம் வரலாற்றின் பிரதிபலிப்பைப் பெறும் வகையில் இதனை புதுப்பிக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad