தடையை மீறுவோம்; தமிழக அரசுக்கு ஷாக் கொடுத்த அர்ஜுன் சம்பத்!
நாடு முழுவதும் வரும் 10ஆம் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு, பிரம்மாண்ட ஊர்வலங்கள் நடத்தப்படும். கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. எளிமையான முறையில் வழிபாடு நடத்தப்பட்டு பெரும்பாலான இடங்களில்
ஊர்வலமின்றி கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றன. தற்போது கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்புகள் பெரிதும் குறைந்திருக்கின்றன. எனவே வெகு விமர்சையான முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட பல்வேறு இந்து அமைப்புகளும் திட்டமிட்டுள்ளன.
தமிழக அரசு தடை
ஆனால் மாநில அரசுகளின் கெடுபிடிகள் சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா அச்சம் காரணமாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், பொது இடத்தில் வைப்பதற்கும், நீரில் கரைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தனி நபர்கள் தங்கள் வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தடை உத்தரவுக்கு சிலை தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை கலைவாணர் அரங்கம் அருகே சிலைகளுடன் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்து மக்கள் கட்சி திட்டம்
அங்கு வந்த போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டக்காரர்கள் விடாப்பிடியாக இருந்ததால், அவர்களை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், எங்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருந்தோம். ஆனால் இதன் கொண்டாட்டத்திற்கு அரசு தடை விதித்துவிட்டது.
No comments:
Post a Comment