பாலம் அமைக்கும் பணியில் விபத்து: விளக்கம் சொன்ன அமைச்சர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, September 1, 2021

பாலம் அமைக்கும் பணியில் விபத்து: விளக்கம் சொன்ன அமைச்சர்!

பாலம் அமைக்கும் பணியில் விபத்து: விளக்கம் சொன்ன அமைச்சர்!

மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 29ஆம் தேதி மாலை நாகனாகுளம் பேங்க் காலனி அருகே பாலத்தில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி நடைபெற்றது.
அப்போது, ஹைட்ராலிக் கிரேன் மூலம் இரண்டு தூண்களை இணைக்கும் பணி நடந்தது. அப்போது எந்திரம் பழுதாகி விழ, அதனால் சிமென்ட் கான்கிரேட் கீழே விழுந்தது. அதில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் ஆகாஷ் சிங், சுராஜ்குமார் மாட்டிக்கொண்டதில் ஆகாஷ் சிங் மரணமடைந்தார். குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணியாற்றியதால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை.

சட்ட சபையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒப்பந்ததாரர்களின் கவனக்குறைவே இதற்கு முழு காரணம். விபத்து நடந்த செய்தி அறிந்தவுடன் முதல்வர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அதனடிப்படையில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தோம்.

இந்த விபத்து நடைபெறும்பொழுது சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் யாரும் அந்த இடத்தில் இல்லை. இந்த விபத்து குறித்து ஆய்வு செய்ய திருச்சி என்.ஐ.டி நிறுவனத்தைச் சேர்ந்த பாஸ்கரன் தலைமையில் நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு ஒன்று சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தொடரப்பட்டுள்ளது

இனி நடைபெறும் பணிகளில் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad