வாகனங்களில் பம்பருக்கான தடை தொடரும்!
கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து ஏற்படும் போது ஏர்பேக் செயல்படாமல் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு தடை விதிக்குமாறு
சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் நலன் கருதியே பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், மத்திய அரசின் இந்த உத்தரவை, மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும். அரசின் கொள்கை
முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment