நெருங்கிய சசிகலா, நழுவிய எடப்பாடி: அதிமுகவில் புதிய அத்தியாயம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

நெருங்கிய சசிகலா, நழுவிய எடப்பாடி: அதிமுகவில் புதிய அத்தியாயம்!

நெருங்கிய சசிகலா, நழுவிய எடப்பாடி: அதிமுகவில் புதிய அத்தியாயம்!

ஓபிஎஸ்ஸை சசிகலாவும், டிடிவி தினகரனும் சந்தித்திருப்பது அதிமுகவில் புதிய அத்தியாயம் எழுதப்படவுள்ளதை குறிப்பதாக கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடலிறக்க பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நலமாக இருக்கிறார் இன்று (நேற்று) வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தனது மனைவியை இழந்த ஓபிஎஸ் மிகுந்த துயரத்துக்கு ஆளானார்.
ஓபிஎஸ்ஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆறுதல் கூறினர். தொடர்ந்து சசிகலா வந்து ஆறுதல் கூறியதும் பின்னர் டிடிவி தினகரன் வந்ததும் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவின் உதவியாளர் கார்த்திக், ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் மூலமாக சசிகலா மருத்துவமனைக்கு வருவதை உறுதிப்படுத்தினார். ஓபிஎஸ் குடும்பத்தினரும் சசிகலா வருகையை எதிர்பார்த்திருந்தனர்.
சசிகலா வருகிறார் என தகவல் வந்ததுமே எடப்பாடி பழனிசாமி நழுவிக்கொண்டார். ஆனாலும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட பல எம்.எல்.ஏக்களும், கட்சி நிர்வாகிகளும் அங்கேயே இருந்தனர். ‘சிகிச்சை பெறும் போதே நீங்கள் வருவீர்கள் என அம்மா எதிர்பார்த்தார்’ என ஜெயபிரதீப் சசிகலாவிடம் அழுதபடி கூறியுள்ளார். ஓபிஎஸ், ரவீந்திரநாத், ஜெயபிரதீப், கவிதா பானு என அனைவருக்கும் ஆறுதல் கூறினார். விஜயலட்சுமிக்கு மேற்கொண்ட சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad