மரபை மாற்றிய டிடிவி தினகரன்: கண் கலங்கிய ஓபிஎஸ் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

மரபை மாற்றிய டிடிவி தினகரன்: கண் கலங்கிய ஓபிஎஸ்

மரபை மாற்றிய டிடிவி தினகரன்: கண் கலங்கிய ஓபிஎஸ்


உடல் நலக்குறைவால் சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (66) நேற்று காலை உயிரிழந்தார்.‌‌
தமிழக முதல்வர் மு.க‌.ஸ்டாலின், அமைச்சர்கள், மற்றும் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்ட பலர் சென்னையில் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்காக சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு நேற்று மாலை எடுத்து வரப்பட்டது.

பெரியகுளம் தென்கரை தெற்கு அக்ரஹாரத் தெருவில் உள்ள ஓ.பி.எஸ்ஸின் இல்லத்தில் அவரது மனைவி விஜயலட்சுமியின் பூத உடல் வைக்கப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.ஓபிஎஸ் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறியது அதிமுகவுக்குள் பேசுபொருளான நிலையில் தினகரனனின் சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நேற்றிரவு பத்து மணியளவில் ஓபிஎஸ்ஸின் பெரியகுளம் வீட்டுக்கு சென்ற டிடிவி தினகரன் விஜயலட்சுமியின் பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மனைவி இறந்த துக்கத்தில், கண்கலங்கியிருந்த ஓ.பி‌எஸ்ஸுக்கு ஆறுதல் கூறினார். அங்கேயே அரை மணி நேரம் அமர்ந்து ஓபிஎஸ் குடும்பத்தினரிடமும் தனது துக்கத்தை பகிர்ந்து கொண்டு ஆறுதல் சொன்னார்.

No comments:

Post a Comment

Post Top Ad