கேள்வித்தாளில் மாற்றமா? தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

கேள்வித்தாளில் மாற்றமா? தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!

கேள்வித்தாளில் மாற்றமா? தமிழகப் பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதையொட்டி அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. நடப்பாண்டு கொரோனா இரண்டாவது அலை பரவியதால் மீண்டும் பள்ளிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டது. தற்போது நோய்ப்பரவல் பெரிதும் குறைந்திருப்பதால் பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக அரச ு ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது. அதில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. 50 சதவீத மாணவர்களை மட்டும் அழைத்து சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டது. தமிழக அரசின் உத்தரவின் பேரில், நேற்று (செப்டம்பர் 1) முதல் 9-12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதால் தங்கள் நண்பர்கள், ஆசிரியர்களை பார்த்து

மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சூழலில் பல்வேறு பள்ளிகளில் நேற்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான அனுபவங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தேன். அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். தங்களது நண்பர்களை சந்தித்து மிகவும் உற்சாகமாக இருக்கின்றனர். அடுத்த ஒருவாரத்திற்க ு மாணவர்களின் வருகையை கண்காணிக்க உள்ளோம். எத்தனை மாணவர்கள் வருகின்றனர் என்பதைக் கவனித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும். அனைத்து பள்ளிகளிலும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad