டாஸ்மாக் கடைகளில் அதிர்ச்சி; வெளியானது முக்கிய எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

டாஸ்மாக் கடைகளில் அதிர்ச்சி; வெளியானது முக்கிய எச்சரிக்கை!

டாஸ்மாக் கடைகளில் அதிர்ச்சி; வெளியானது முக்கிய எச்சரிக்கை!

தமிழகத்தில் சில்லரை மதுபான விற்பனையை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மாநில அரசுக்கு எப்போதும் லாபம் ஈட்டித்தரும் நிறுவனமாக டாஸ்மாக் கடைகள் விளங்குகின்றன. ஆண்டுதோறும் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்து வருகிறது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நோய்ப்பரவலை கருத்தில் கொண்டு சில மாதங்கள் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து கொரோனா தடுப்ப ு நடவடிக்கைகளுடன் மதுபானக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

காற்றில் பறக்கும் கட்டுப்பாடுகள்

மதுக்கடைகளை அவ்வப்போது பிளிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்வது, கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி கொண்டு தொடர்ச்சியாக கைகளை கழுவுவது, அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்வது, கடைகளின் முன்புறம் போதிய இடைவெளி விட்டு வட்ட குறியீடுகள் போட்டு வாடிக்கையாளர்களை வரவழைப்பது, பொது இடங்களில் மது அருந்தாமல் பார்த்துக் கொள்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் சில மதுக்கடைகளில் கூட்ட நெரிசல்களில் கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்க விடப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

கடும் நடவடிக்கை அவசியம்

வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் வந்து மது வாங்கிச் செல்வதும், கடைகளில் தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்வதில்லை என்றும் புகார்கள் கூறப்படுகின்றன. இதுபற்றி டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தகவல் சென்றுள்ளது. இந்த சூழலில் மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட மேலாளர்களை டாஸ்மாக் எச்சரித்துள்ளது.


கலக்கத்தை ஏற்படுத்தும் உத்தரவு

மதுக்கடைகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். அலட்சியம் காட்டும் ஊழியர்கள் மீது இடமாறுதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு டாஸ்மாக் ஊழியர்களிடம் சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad