பொதுச் சொத்துக்களை விற்கக்கூடாது: ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதும் முதல்வர்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, September 2, 2021

பொதுச் சொத்துக்களை விற்கக்கூடாது: ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதும் முதல்வர்!

பொதுச் சொத்துக்களை விற்கக்கூடாது: ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதும் முதல்வர்!

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை காங்கிரஸ் செல்வபெருந்தகை, ராமசந்திரன், மாரிமுத்து உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை, "7 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் ஒன்றிய அரசு பொதுச் சொத்துக்களை விற்க முயற்சி செய்து வருகிறது.

துறைமுகங்கள், விமான நிலையங்களை விற்க முயற்சி செய்கிறது. தமிழக முதல்வர் இதனை தடுத்து நிறுத்தி சொத்துக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்", என்றார்.

இதனை அடுத்து பேசிய தளி ராமச்சந்திரன், "60 ஆண்டுகளாக அரசு சேர்த்ததை 7 ஆண்டுகளில் பாஜக அரசு விற்று வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும்", என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "பொது சொத்துக்களை தனியார் மயமாக்குவத ை திமுக ஒருபோதும் ஏற்காது. தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளின் போது ஒன்றிய அரசு மாநில அரசை கலந்து ஆலோசிக்க வேண்டும். ஏனெனில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு இடங்களை மாநில அரசு அளிக்கிறது. லாபகரமாக இயங்கும் தொழிற்சாலைகளை விற்க முயல்வதை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த முயற்சிக்கும்", என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad